காசு முடித்து கடவுளை வேண்டுவது..!!..!!

தலைப்பைப் பாத்துட்டு என்னடா இவன் ஸ்பிரிசுவல் போஸ்ட் போடுறானேனு நினைக்க வேண்டாம். நான் இந்த தலைப்பில் உள்ளதை எப்படி பார்க்கிறேன் என்பதர்க்கான போஸ்ட்

Imageபல பெண்மணிகள், என் அம்மா உட்பட இத அடிக்கடி செய்கிறார்கள். நான் அம்மாவிடம் அடிக்கடி கடிந்து கொள்வேன், இப்படி விழுந்து விழுந்து சாமி கும்பிடாதீங்க. உங்க உடம்பு பாதிக்கும் அளவுக்கு காலைல சாப்பிடும் நேரம் தவறுகிர மாதிரி செயதீங்கனு.

வெள்ளி கிழமை, அமாவாசை, பிரதோஷம் போன்ற நாட்கள்ள காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து துணி துவைக்க வாஷிங் மெஷின் ல போட்டு, அது செமி ஆட்டோமேடிக் என்பதால் துவைத்த துணிகளை எடுத்து, 3 பக்கெட் வரிசையா வெச்சு குனிஞ்சு நிமிர்ந்து இடுப்பு வலி எடுக்க அலசி பிழிஞ்சு காயபோட்டுட்டு, வீடெல்லாம் கூட்டி துடைச்சு, தலைக்கு குளிச்சு, பேருக்காக தலை துவட்டிட்டு, சாமி ரூம்ல உக்காந்து பூஜை பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. நடுவுல அப்பப்ப என்னை எழுப்ப குரல் குடுத்துகிட்டே சமையல் ரூம்ல காஃபி, ப்ரேக்ஃபாஸ்ட் வேலையும் நடக்கும்.

இதெல்லாம் பண்ணுவாங்க ஆனால் அவங்க எதுவும் சாப்பிட மாட்டாங்க. கேட்டால் விரதம்பாங்க. சரி அவ்வளவு பூஜை பண்ணணும்னு முந்தின நாளே தெரியும், இருந்தும் ஏன் எல்லா வேலையும் ஒரே நாள் ல செய்யறீங்கணு கேட்டா சாமி பூஜை பண்ணும் போது வீடு அழுக்கா இருக்க கூடாது, அழுக்கு துணி எதுவும் இருக்க கூடாதுணு எல்லா வேலையும் அந்த நாள்தான் செய்யணும்னு சொல்லிட்டு செய்வாங்க.

ஏன் இப்படி எல்லாம்? லாஜிக்காண பதில் இன்னைக்கு வரைக்கும் பிடிபடல. எவ்வளவு சொல்லியும் / திட்டியும் / அன்பா சொல்லியும் / உடம்புக்கு வர்ற நோய்க்கு இது தான் காரணம்னு சொல்லி பயம் காட்டியும் இதெல்லாம் குறையல.

சரி காசு முடித்து வைக்கறதுக்கு வருவோம். கடவுள் விஷயத்துல நிறைய சாஷ்த்ர சம்பிரதாயங்கள, ஏன் எதுக்குனு கேள்வி கேக்காம, அதீத நம்பிக்கையோட, தலைமுறை தலைமுறையா அவங்கவங்க வீட்டுல சொல்லி குடுக்குற மாதிரி பின்பற்றி பின்பற்றி கடைசில யாருக்கும் ஏன் செய்யறோம்னு தெரியரது இல்லை. தெரிஞ்சுக்கறதும் இல்லை. ஆனால் சில சின்ன சின்ன விஷயங்கள் – இதுக்கு இப்படி செய்யணும்னு உருவாக்கி வெச்சுக்கிட்டாங்க. அதுல ஒண்ணு தான் காசு முடித்து வைக்கறதுக்கு. ஏதாவது கஷ்டம் வந்தால்  அந்த கஷ்டம் போயிடணும்னு வேண்டி சில சில்லரை காசுகளை ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை துணியில் வைத்து பொட்டலம் மாதிரி மடித்து, துணியின் நுணிகளை வைத்து முடிச்சு போடுவார்கள். இதை வீட்டு சாமி ரூம்ல வெச்சுடுவாங்க. அந்த கஷ்டம் சால்வ் ஆச்சுனா, எந்த கடவுள நெனைச்சு வேண்டினாங்களோ அந்த கோவிலுக்கு போய் உண்டியல்ல போடணும். சரி எந்த மாதிரி கஷ்டங்கள்னு பாக்கலாம்:

  • 3 மாச பேரன், என்னணு சொல்ல தெரியாம விடிய விடிய அழுதாலோ
  • யாருக்காவது ஏதாவது ஆபரேஷன் நடந்தாலோ
  • மகன் வீடு வங்கறதுக்கு வேண்டிக்கிட்டு
  • அவங்க உடம்பு சரி இல்லாம படுத்துக்காம இருக்கறதுக்கு
  • மகன் வண்டி ஒட்டி எங்கயும் விபத்து நடக்காம இருக்க

அப்படினு பட்டியல் நீண்டுகிட்டே போகும். இதுல பல ஐட்டம்கள் வரதுக்கு காரணம் ஏதாவது ஜோசியர்ர் சொன்னத வெச்சு இருக்கும். நமக்கு சட்டுனு தோணும், என்ன இது பைத்தியகாரதனமா, காசு முடிச்சு வெச்சா சரியா போயிடுமா. கான்செப்ட் அதுவல்லனு போக போக (அந்த கான்செப்ட் புடிக்கலைனாலும்) புரிஞ்சுது. பல பெண்களுக்கு 40 வயச தாண்டிட்டா பல விதமான ஹார்மோன் மாற்றங்களை அவங்க உடம்பு எதிர்கொள்ளும். அவங்க மெண்டல் அண்ட் ஃபிசிகல் ஹெல்த் ரெண்டும் பயங்கர நெருக்கமான ஆனால் பொறுப்பற்ற நண்பர்கள் போல ஆயிடும்.

உடம்பு சரி இல்லைனா, ஏதாவது யோசிச்சு மனசளவிலும் கஷ்டபடுவாங்க. மனசுக்கு ஏதாவது கஷ்டம் வர்ற மாதிரி செய்தி வந்தால், சின்ன விசயத்த பெரிசா கற்பனை பண்ணி பண்ணி உடம்புக்கு ஏதாவது வந்து கஷ்டபடுவாங்க. அல்சர், மூட்டு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, மூலம், நெஞ்சேரிச்சல், குலையெரிச்சல் னு இந்த பட்டியலுக்கு ஒரு அளவே இல்ல. எல்லாம் ஒண்ணு சேர்ந்து அதிக பவர் உள்ள மருந்தேல்லாம் ஒத்துக்காம போயிடுது. ஆகமொத்தம் ஒரு தலைவலி காய்ச்சல் னா கூட க்ரோசின் போட முடியாது. மருத்துவர தேடிக்கிட்டு ஓடனும். பசங்க வெளியூர்ல வேலை செய்றவங்களா இருந்தா இன்னும் கஷ்டம்னு சொல்லவே தேவை இல்ல.

ஆக, இப்படி இருக்கரவங்களுக்கு காசு முடிச்சு வெக்கறது ஒரு லைஃப் சப்போர்ட் மெடிகேஷன் மாதிரி. பிரச்சனை என்னன்னா இது ஒரு புதை குழி மாதிரி. ரொம்ப பழகிட்டா சின்ன சின்ன விசயதுக்கெல்லாம் காசு முடிச்சு வெப்பாங்க. போக போக வாழ்க்கை மேல இருக்கற நம்பிக்கை போய் எல்லாதுக்குமே வேண்டுதல் வெப்பாங்க. அளவான மனசுக்கு நிறைவும் சந்தோஷமும் தருகிற கடவுள் வழிபாடு போதுமானது என்பது என்னோட பார்வை.

Imageமுடிவா என்ன தான் சொல்லவரேனு எனக்கே புரியல. அம்மா அப்பா நல்லாருக்கணும்னு பசங்க உழைப்ப நம்புறாங்க. அம்மா அப்பா கடவுள நம்புறாங்க. இதுல மேல சொன்ன அளவுக்கு கடவுள் பக்தி சீரியஸ் ஆகும் போது பசங்களுக்கு அது எவ்ளோ கஷ்டத்த குடுக்குது. அத எடுத்து சொன்னா பெரியவங்க எவ்ளோ கஷ்ட படறாங்க. இத ஒரு தராசு மாதிரி பேலன்ஸ் பண்றது எல்லா நேரத்துலயும் முடியரது இல்ல. இருந்தாலும் முயற்சி பண்ணிட்டே இருப்போம்.

வாழ்க வளமுடன்!

“என்ன நா சொல்றது..!!”

Posted in Uncategorized | Tagged , , , | 2 Comments

Micro-dreaming..

Yes.. “Micro-dreaming”.. Read it like micro-blogging, micro-financing etc..

More often, we dream of small small activities that we would like to do, to make our life beautiful, to make ourselves feel satisfied. I too have such dreams. This is not something you can always remember. You think of one, and it fades away before another set comes in. Right now, I think of “writing / blogging”, “travel and travel diaries”, “meditation”, “professional gymming” etc etc..

Some thought processes will not have myself in picture. Like how our environment / globe / country / city / locality  can be better.

For instance, today I had an hour long discussion with one of my senior colleagues about organic products, its production quality, soil quality, effects of fertilizers, population, pollution, rain water harvesting, why developed nation no longer build any refineries or coal based power plants, why do they outsource products that pollutes environment (tanneries etc..)

So this post is nothing but, only a beginning of one of my micro-dreams “writing / blogging”

Be&Make

Ranjith Mohan

Posted in Uncategorized | Leave a comment

Hello world!

Welcome to WordPress.com! This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

Happy blogging!

Posted in Uncategorized | 1 Comment